ADDED : டிச 27, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருச்சியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் குன்றத்து பள்ளி மாணவியருக்கு மாநில விருது வழங்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள அனைத்து அமிர்த வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கான மாநில அறிவியல் கண்காட்சி திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடந்தது.
ஏழு தலைப்புகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. அதில் கணிதத்தில் 'கியூ ஆர் கோட் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவியர் தேஜஸ்வினி, ஸ்ரீநிதி ஆகியோரின் வடிவமைப்புகளுக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
மாணவியரை பள்ளி முதல்வர் சசிரேகா, வழிகாட்டிய ஆசிரியர்கள் சத்தியபாமா, காயத்ரி, உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

