ADDED : அக் 08, 2024 04:57 AM

அ நிறம் | அளவு
மதுரை : கேட்டி வில்காக்ஸ் நினைவு கோப்பைக்கான மாநில பள்ளிகளுக்கான பூப்பந்து போட்டி மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் நடக்கிறது. 40 பள்ளிகளின் அணிகள் நாக்அவுட் போட்டிகளில் பங்கேற்றன.
மதுரை சி.எஸ்.ஐ. பிஷப் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன் தொடங்கி வைத்தார். மேரி ஜெய்சிங், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரி தலைவர் ரகுராம், தாளாளர் ஸ்டான்லி ஜெயராஜ், தலைமையாசிரியை மேரி கலந்து கொண்டனர். நாக் அவுட் முடிவில் எட்டு அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
