ADDED : ஜன 10, 2025 05:25 AM

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழா 17வயது பிரிவு மாணவிகளுக்கான மாநில பூப்பந்து குழு விளையாட்டுப் போட்டி மதுரையில் நடந்தது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
முதல் அரையிறுதி போட்டியில் சென்னை, செங்கல்பட்டு அணிகள் மோதின. சென்னை அணி 35 - 21 , 35 - 19 புள்ளிகளில் செங்கல்பட்டு அணியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் மதுரை, கரூர் அணிகள் மோதின. இதில் மதுரை அணி 35 - 10, 35 - 32 என்ற புள்ளிகளில் கரூரை வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் மதுரை அணி 35 - 26, 35 - 28 என்ற புள்ளிகளில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற மதுரை அணியில் மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் கோபிகா, நிகிதா, பிரியாலட்சுமி, ஸ்ருதி, ரக் ஷிதா, தரண்யா, மோனிஷா, ஷாஜிதா, சபியா, சுபாஷினி விளையாடினர். மதுரை, கரூர், தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் வினோத், ஜெயலட்சுமி, கற்பகம், தலைமையாசிரியை மேரி, உடற்கல்வி இயக்குநர் பெர்சிஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ்கண்ணன், ஷர்மிளா பாராட்டினர்.

