ADDED : ஜன 02, 2024 05:48 AM

மதுரை; தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் மதுரை ருத்ரன் பாட்மின்டன் கிளப்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
10 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆலக் தங்கம், சுகன் வெள்ளிப்பதக்கம் வென்றனர். 12 வயது பிரிவில் தக்சன்தேவ் தங்கம், ரிஷி வெள்ளி, 14 வயது பிரிவில்அகிலன் தங்கம், சிவா வெள்ளி, 17 வயது பிரிவில் ஹரிதரன் தங்கம், சுசி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
12 வயது பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆசி தங்கம், ஸ்ரீநிதி வெள்ளி, 14 வயது பிரிவில் ஹாசினி தங்கம், சம்பவி வெள்ளி வென்றனர். 17 வயது பிரிவில் பிளஸ்சி தங்கம்,வர்னிகா வெள்ளி, ஜாஸ்மின் வெண்கலம் வென்றனர். இரட்டையர் பிரிவில் வர்னிகா, ஹாசினி ஜோடி தங்கம்,பிரித்திகா, யாசிகா ஜோடி வெள்ளி வென்றனர்.சிறந்த ஆட்டக்காரர்களாக ஆலக், ஹாசினி தேர்ந்தெடுக்கபட்டனர்.
பயிற்சியாளர்கள் குமார், சுரேஷ், ஜனா, இளையோர் விளையாட்டு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அன்பரசன் பாராட்டினர்.

