தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில பூப்பந்து போட்டி

மாநில பூப்பந்து போட்டி

மாநில பூப்பந்து போட்டி


ADDED : ஜூலை 11, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2025 03:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளி மாணவிகளுக்கு இடையிலான மாநில ஐவர் பூப்பந்து போட்டி சென்னை சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி மாணவிகள் கவி பிரியா, ஹாசினி, ஸ்ருதி, நிகிதா, சோபிகா, முத்துமீனா, ரக்ஷிதா, கோபிகா, சுபாஷினி, மோனிஷா பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை ஜெஸி மோசஸ் பள்ளி மாணவிகளை 35 - 28, 35 - 31 செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம், கோப்பை வென்று ரூ.25ஆயிரம் ரொக்கம் பெற்றனர். நிகிதா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். பள்ளி முதல்வர் செல்வகுமார், ஒய்.எம்.சி.,ஏ. கல்லுாரி உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியர் மெர்லின் தங்க டேனியல் பரிசு வழங்கினர்.

சாய்ராம் பொறியியல் கல்லுாரியில் நடந்த போட்டியில் ஓ.சி.பி.எம். மாணவிகள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை பல்லாவரம் செயின்ட் தெரசா பள்ளி மாணவிகளை 35 - 27, 35 - 30 செட்களில் வீழ்த்தி தங்கப்பதக்கம், கோப்பையை வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us