தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில சதுரங்கத்தில் வென்ற வீரர்கள்

 மாநில சதுரங்கத்தில் வென்ற வீரர்கள்

 மாநில சதுரங்கத்தில் வென்ற வீரர்கள்


ADDED : பிப் 09, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற்கல்வித்துறை சார்பில் மாநில சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

இதில் பங்கேற்ற 457 வீரர்களில் 25 வீரர்கள் வெற்றி பெற்றனர். 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வல்லபா வித்யாலயா பள்ளி முரளிகண்ணன் முதலிடம், ஜிதேஷ் 2 ம் இடம், லட்சுமணன் 3 ம் இடம், பிரவினேஷ் 4 ம் இடம், எஸ்.பி.ஓ.ஏ. ஜெயின்தேவி ஐந்தாம் இடம் வென்றனர்.

மாணவியர் பிரிவில் சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி ஆத்விகஸ்ரீ முதலிடம், கிரேஸ் பப்ளிக் பள்ளி மித்ரா 2 ம் இடம், வல்லபா வித்யாலயா ஜூலியானா சன்சியா போஸ்வெல் 3 ம் இடம் வென்றனர்.

15 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ., பள்ளி ஹேமவர்ஷன் முதலிடம், ஜெ.வி. சி.பி. எஸ்.இ. பள்ளி லாவண் 2ம் இடம், வல்லபா வித்யாலயா பள்ளி கவின் சத்யா 3 ம் இடம், பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜாபர் 4 ம் இடம், பரவை அரசு பள்ளி ரிஷிகா 5 ம் இடம் வென்றனர்.

மாணவியர் பிரிவில் வல்லபா வித்யாலயா மகிழ்விழி முதலிடம், செவன்த்டே மெட்ரிக் பள்ளி வித்துன் சிம்மயாழி 2 ம் இடம், வல்லபா வித்யாலயா ஜூவானா சோபியா போஸ்வெல் 3 ம் இடம் வென்றனர். எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 மாணவர்கள், 2 மாணவியர், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2 மாணவர்கள் 2 மாணவியர் பரிசு வென்றனர். 66 மாணவர்கள் பங்கேற்ற ஜெயின் வித்யாலயா பள்ளிக்கு முதல் பரிசு, 51 மாணவர்கள் பங்கேற்ற எஸ்.பி.ஓ.ஏ., பள்ளிக்கு 2ம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு கல்லுாரிச் செயலாளர் நாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பேராசிரியர் பழனியப்பன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us