ADDED : ஆக 02, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் பள்ளிகளுக்கான 22வது டி.வி. சுந்தரம் ஐயங்கார் நினைவு கையுந்து பந்தாட்ட போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில் 28 அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.
தஞ்சை புனித அந்தோணியார் பள்ளி முதலிடம், கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளி 2ம் இடம், மதுரை அமெரிக்கன் கல்லுாரி பள்ளி 3ம் இடம், திருச்சி காஜாமியான் பள்ளி 4ம் இடம் வென்றன. போட்டிகளை பள்ளி செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் வித்யாவதி வரவேற்றார். இறுதி போட்டியில் மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் பேசினார்.