ADDED : டிச 05, 2024 06:11 AM

மதுரை: தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் மதுரையில் மாநில ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
ஆண்கள் பிரிவு போட்டி: 12 வயதுக்குட்பட்டோர் இறுதிப் போட்டியில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி 5-:3 என்ற கோல் கணக்கில் ஓம் சாதனா பள்ளியை வீழ்த்தியது. 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் திருநகர் எம்.ஜி.ஆர். அகாடமி அணி 7:-5 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் வித்யாலயாவை வீழ்த்தியது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் எம்.ஜி.ஆர். அகாடமி அணி 12:11 என்ற கோல் கணக்கில் வேலம்மாள் வித்யாலயாவை வீழ்த்தியது. 19 வயது பிரிவில் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி 8:3 என்ற கோல் கணக்கில் எம்.ஜி.ஆர். அகாடமி அணியை வீழ்த்தியது.
14 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் வேலம்மாள் வித்தியாலயா பள்ளி ஏ' அணி 4:3 என்ற கோல் கணக்கில் பி அணியை வீழ்த்தியது.
கவுன்சிலர்கள் ஸ்வேதா, இந்திரா காந்தி, சவிதாபாய் பள்ளி தலைமையாசிரியர் மீனா, தொழிலதிபர் ரெங்கராஜன் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், பரமாத்மா, குமார், நடுவர்கள் பிரைட், ஜெயசீலன் கலந்து கொண்டனர். இளைஞர் விளையாட்டு கழக செயலாளர் அன்பரசன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.