ADDED : பிப் 05, 2026 05:22 AM
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பிஷப் கிறிஸ்டோபர் ஆசீர் நினைவு மாநில கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடந்தது.
முதல் அரையிறுதிப் போட்டியில் உடுமலைபேட்டை வித்யாசாகர் கல்லுாரி 4-3 கோல் கணக்கில் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியை வீழ்த்தியது. அடுத்த அரையிறுதியில் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி 3-0 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தியது.
மூன்றாமிடத்திற்கான போட்டியில் அதியமான் கல்லுாரி 3-0 கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரியை வீழ்த்தி சுழற்கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லுாரி 5-1 கோல் கணக்கில் வித்யாசாகர் கல்லுாரியை வீழ்த்தியது. முதல்பரிசு ரூ.25ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதல்வர் பால்ஜெயகர் தலைமை வகித்தார்.
மதுரை மாவட்ட ஹாக்கி சங்க துணைத்தலைவர் கண்ணன் பரிசு வழங்கினார்.

