ADDED : டிச 19, 2025 05:59 AM
மதுரை: மதுரை ரிசர்வ்லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில ஹாக்கி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
காலிறுதிப் போட்டி முடிவுகள் முதல் காலிறுதியில் சென்னை ஐ.ஓ.பி. அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜி.எஸ்.டி. அணியை வீழ்த்தியது. 2வது காலிறுதியில் சென்னை இந்தியன் வங்கி 2 - 0 கோல் கணக்கில் மதுரை ரிசர்வ்லைன் அணியை வீழ்த்தியது. 3வது காலிறுதியில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதி அணி 5 - 4 என்ற கோல் கணக்கில் சென்னை இன்கம்டாக்ஸ் அணியை வீழ்த்தியது. 4வது காலிறுதிப் போட்டியில் சென்னை சதர்ன் ரயில்வே அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் சென்னை ஏ.ஜி.ஓ.ஆர்.சி. அணியை வீழ்த்தியது.
இன்று (டிச.18) நடக்கும் முதல் அரையிறுதியில் ஐ.ஓ.பி., அணியும் விளையாட்டு விடுதி அணிகளும் அடுத்த அரையிறுதியில் இந்தியன் வங்கி, சதர்ன் ரயில்வே அணிகள் மோதுகின்றன. டிச. 20 ல் இறுதிப்போட்டி நடக்கிறது.
