ADDED : ஏப் 13, 2026 11:39 PM
அ நிறம் | அளவு
மதுரை: மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டி ஏப்.27 முதல் மே 2 வரை கோவையில் நடக்கவுள்ளது.
இதற்கான மதுரை மாவட்ட ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு நாளை(ஏப்.15) காலை 6:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. 1.1.2007 அன்று அல்லது அதன் பின்னர் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை (அசல்) கொண்டு வருவது அவசியம். விவரங்களுக்கு 94439 29707ல் தொடர்புகொள்ளலாம்.
