/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருநகரில் மாநில ஹாக்கி போட்டிகள் சென்னை சிட்டி போலீஸ் சாம்பியன்
/
திருநகரில் மாநில ஹாக்கி போட்டிகள் சென்னை சிட்டி போலீஸ் சாம்பியன்
திருநகரில் மாநில ஹாக்கி போட்டிகள் சென்னை சிட்டி போலீஸ் சாம்பியன்
திருநகரில் மாநில ஹாக்கி போட்டிகள் சென்னை சிட்டி போலீஸ் சாம்பியன்
ADDED : பிப் 17, 2025 05:35 AM

திருநகர் : திருநகரில் நடந்த மாநில ஹாக்கி போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது..
திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங், பழனி ஆண்டவர், மெய்யப்பன் நினைவு மாநில ஹாக்கி போட்டிகள் பிப். 9ல் துவங்கியது. நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் 30 அணிகள் பங்கேற்றன. நேற்றைய இறுதிப்போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஹாக்கி எக்ஸலன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை இந்தியன் வங்கி அணி மூன்றாம் பரிசு, சென்னை ஜெய் ஹாக்கி அகடமி அணி நான்காம் பரிசும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் திருநகர் ஹாக்கி கிளப் தலைவர் பாலு தலைமை வகித்தார். மூத்த துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். திருநகர் ஹாக்கி கிளப் புரவலர் அழகர்சாமி வரவேற்றார். சிறந்த கோல்கீப்பராக சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை வீரர் அருண், தற்காப்பு ஆட்டக்காரராக சென்னை சிட்டி போலீஸ் அணி வீரர் தமிழ்ச்செல்வன், நடு கள ஆட்டக்காரராக கோவில்பட்டி ஹாக்கி எக்ஸலன்சி அணி வீரர் ரிஷி, சென்னை ஜெய் அகாடமி வெங்கட், முன்கள ஆட்டக்காரராகவும், இளம் வீரராக திருநகர் ஹாக்கி கிளப் கவியரசன் தேர்வு செய்யப்பட்டனர்.
மதுரை போலீஸ் எஸ்.பி. அரவிந்த் பரிசுகள் வழங்கினார். மூத்த பயிற்சியாளர் அழகப்பன் நன்றி கூறினார். மதுரை மாவட்ட ஹாக்கி கிளப் செயலாளர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை திருநகர் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் செய்தனர்.

