தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி


ADDED : ஆக 29, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: பேரையூர் தாலுகா அத்திப்பட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளியில், உலக ஷேடாகான பாரம்பரிய கராத்தே கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டிகள் நடந்தன. மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 13 பள்ளிகளின் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

கராத்தே கூட்டமைப்புத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் சுமதி, பள்ளி முதல்வர் கற்பகமலர், கராத்தே கூட்டமைப்பு துணைத் தலைவர் சேதுராமன், துணைச் செயலாளர் ராஜலிங்கம் விழாவை துவக்கி வைத்தனர். ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் ஷிப் பட்டம் வென்றது.

பள்ளிச் செயலாளர் ஜி.மாரியப்பன் பரிசு வழங்கினார்.

ராமையா நாடார் மெட்ரிக் பள்ளியின் தலைவர் கிருபாநிதி, மேல்நிலைப் பள்ளித் தலைவர் அசோகன், செயலாளர் சுதந்திரசேகரன், பொருளாளர் ராஜசேகரன், பி.எம்.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us