UPDATED : நவ 17, 2026 07:16 PM
ADDED : நவ 17, 2026 07:16 PM

அ நிறம் | அளவு
மதுரை: ஈரோடு டெக்ஸ்வேலியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமத்திற்கான (எஸ்.ஜி.எப்.ஐ.,) தமிழக கராத்தே அணித் தேர்வு போட்டி நடந்தது.
இதில் மதுரை அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாகத்தில் பயிற்சி பெறும் மாணவிகள் தேர்வாகினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் 36 கிலோ எடை பிரிவில் அழகர்கோவில் சுந்தரராசா பள்ளி மாணவி நந்தித்தா, 40 கிலோ எடை பிரிவில் ஓ.சி.பி.எம்., பள்ளி மாணவி ஜீவிதா வெற்றி பெற்றனர். இருவரும் டிச. 8 முதல் 12 வரை பஞ்சாப் லுாதியானாவில் நடக்கும் தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர். அகாடமி தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், ஜி தொக்குகாய் பொதுசெயலாளர் முத்துராஜூ, பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.
