தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில பாரா தடகளப் போட்டி

 மாநில பாரா தடகளப் போட்டி

 மாநில பாரா தடகளப் போட்டி


ADDED : ஏப் 08, 2026 08:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 08:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தஞ்சாவூரில் நடந்த 21 வது மாநில சீனியர் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை வீரர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

கிளப் த்ரோ போட்டியில் ஆகாஷ் தங்கப்பதக்கம், குண்டு எறிதலில் வெண்கல பதக்கம் வென்றார். சுதாகர் வட்டு எறிதலில் தங்கம், குண்டு எறிதலில் வெண்கலம், ஸ்ரீநாத் குண்டு எறிதலில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றனர்.

ஈட்டி எறிதலில் அமுலி ஈஸ்வரி தங்கம், குண்டு எறிதலில் மனோஜ், பிரசாந்த் தங்கம் வென்றனர். 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் சோணை தங்கம், குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கண்ணன் குண்டு எறிதலில் தங்கம், ஈட்டி எறிதலில் வெண்கலம், வெங்கடேஷ் குண்டு எறிதல், ஈட்டி எறிதலில் வெண்கலம், பாலாஜி 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றனர். எட்வர்டு பிரான்சிஸ் ஈட்டி எறிதலில் வெண்கலம், செல்வேந்திரன் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, பிரேம்குமார் குண்டு எறிதலில் வெள்ளி வென்றனர். அபர்ணா 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம், முனியசாமி குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம், லட்சுமி ஈட்டி எறிதல், வட்டு எறிதலில் வெண்கலம், வீரசெல்வி வட்டு எறிதலில் வெள்ளி, லட்சுமி குண்டு எறிதலில் வெள்ளி, ஹரிணி 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us