/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில சிலம்ப போட்டி : மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
மாநில சிலம்ப போட்டி : மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஜூலை 31, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம், ரோட்டரி கிளப் சார்பில் மாநில சிலம்ப போட்டிகள் நடந்தது.
இதில் வாடிப்பட்டி ஸ்ரீகணேசா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து ஆசான் கணேசன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுருள்வாள் பிரிவில் 7 முதல் பரிசுகள், ஒற்றைக்கம்பு பிரிவில் 8 முதல் பரிசுகள், இதே பிரிவில் முறையே 4 இரண்டாம் பரிசுகள், 2 மூன்றாம் பரிசுகள் பெற்றனர். வென்ற மாணவர்களுக்கு கோப்பையை உலக சிலம்ப விளையாட்டுச் சங்கத் தலைவர் சுதாகரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினர்.