
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான நீச்சல் போட்டி சென்னையில் நடந்தது.
மதுரை கருப்பாயூரணி ரீஜாய்ஸ் நீச்சல் அகாடமி வீரர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அகஸ்தியா 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கம், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் தங்கம், 400 மீட்டர் ஐ.எம். பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தியானேஷ் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் 50 மீட்டர், 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளில் தங்கம் வென்றார்.
இருவரும் ஆகஸ்டில் பெங்களூருவில் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தேர்வாகினர். அகடாமி தலைவர் ஜோசப் ராஜசேகர், துணைச் செயலாளர் முகேஷ், பொருளாளர் ஆரிப், பயிற்சியாளர்கள் சதீஷ் பாண்டியன், வெங்கடேஷ், அப்துல் சலாம் பாராட்டினர்.

