ADDED : ஜன 14, 2025 11:11 PM
மதுரை; பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான 17 வயது ஆடவர் பிரிவினருக்கான குடியரசு தினவிழா குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது.
போட்டி முடிவுகள்
கால்பந்து இறுதிப்போட்டியில் கோவை பயோனியர் மில்ஸ் பள்ளி முதலிடம், சிவகங்கை மன்னர் பள்ளி 2ம் இடம், திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளி 3ம் இடம் பெற்றன.
ஹாக்கி போட்டியில் அரியலுார் எஸ்.டி.ஏ.டி., (அரசுப் பள்ளி) முதலிடம், வேலுார் கர்ணாம்பேட்டை அரசுப் பள்ளி 2ம் பள்ளி, வாடிப்பட்டி அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன. வாலிபால் போட்டியில் மதுரை எஸ்.டி.ஏ.டி., அணி முதலிடம், துாத்துக்குடி போப் நினைவு பள்ளி 2ம் இடம், கன்னியாகுமரி அருணாச்சலம் பள்ளி 3ம் இடம் பெற்றன.
கூடைபந்து போட்டியில் தேனி எஸ்.டி.ஏ.டி. (தேனி நாடார் பள்ளி) அணி முதலிடம், மதுரை எஸ்.டி.ஏ.டி., (அமெரிக்கன் கல்லுாரி பள்ளி) அணி 2ம் இடம், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளி 3ம் இடம் பெற்றன.
கோகோ போட்டியில் சிவகங்கை ஹோலி ஸ்பிரிட் பள்ளி முதலிடம், கோவை தியாகி ராமசாமி நினைவு பள்ளி 2ம் இடம், ஈரோடு கொங்கு கல்வி நிலையம் 3ம் இடம் பெற்றன. எறிபந்து போட்டியில் துாத்துக்குடி முதலிடம், விருதுநகர் 2ம் இடம், தென்காசி 3ம் இடம் பெற்றன. பால் பாட்மின்டன் போட்டியில் தஞ்சாவூர் டி.ஏ. பள்ளி முதலிடம், செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் பள்ளி 2ம் இடம், அரியலுார் பொன்பரப்பி அரசுப்பள்ளி 3ம் இடம் பெற்றன.
கபடியில் துாத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி முதலிடம், திருவாரூர் வடுவூர் பள்ளி 2ம் இடம், புதுக்கோட்டை இலுப்பூர் அரசுப் பள்ளி 3ம் இடம் பெற்றன. பாட்மின்டன் ஒற்றையர் போட்டியில் திருப்பூர் இன்பன்ட் ஜீசஸ் பள்ளி முதலிடம், கோவை பாரதி பள்ளி 2ம் இடம், திருச்சி யு.டி.வி. பள்ளி 3ம் இடம் பெற்றன.
இரட்டையர் பிரிவில் மதுரை லீ சாட்லியர் பள்ளி முதலிடம், சேலம் ஹோலி கிராஸ் பள்ளி 2ம் இடம், திருப்பூர் பிரண்ட் லைன் பள்ளி 3ம் இடம் பெற்றன.
டேபிள் டென்னிஸ் போட்டியில் தேனி டி.எம்.எச்.என்.யு. பள்ளி முதலிடம், செங்கல்பட்டு எம்.சி.சி. பள்ளி 2ம் இடம், சென்னை செயின்ட் பேடே பள்ளி 3ம் இடம் பெற்றன.
இரட்டையர் பிரிவில் சென்னை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி முதலிடம், வேலுார் லட்சுமி பள்ளி 2ம் இடம், தஞ்சாவூர் செயின்ட் ஆண்டனி பள்ளி 3ம் இடம் பெற்றன. லான் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் கோவை முதலிடம், திருச்சி 2ம் இடம், கரூர் 3 ம் இடம் பெற்றன. இரட்டையர் போட்டியில் தஞ்சாவூர் முதலிடம், தர்மபுரி 2ம் இடம், துாத்துக்குடி 3ம் இடம் பெற்றன.