நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார் மற்றும் புதுச்சேரி பிராந்திய கூட்டமைப்பில் உள்ள சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையே மாநில யோகா போட்டி தாளாளர் காசிமாயன் தலைமையில் நடந்தது.
பிராந்திய கூட்டமைப்பின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மணிசுரேஷ், துணைத்தலைவர் ஜெயந்தி சிறப்பு விருந்தனர்களாக பங்கேற்றனர். ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியின் இயக்குநர் ஜெயகிஷோர்குமார், முதல்வர் ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்.

