/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பறந்து வரும் கற்களால் சிதிலமடையும் சிலைகள்
/
பறந்து வரும் கற்களால் சிதிலமடையும் சிலைகள்
ADDED : பிப் 01, 2024 04:10 AM

கொட்டாம்பட்டி : வலைச்சேரிபட்டி கல்குவாரியில் வெடி வைப்பதால் பறந்து வரும் கற்களால் பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
வலைச்சேரிபட்டியில் இடைநிலை அய்யனார் கோயில் அருகே 50 மீட்டர் துாரத்தில் அகிலா குட்டு என்னும் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு வெடி வைப்பதால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பூஜாரி ராஜேந்திரன்: இரவு, பகலாக அதிக சக்தி வாய்ந்த வெடி வைப்பதால் பறந்து வரும் கற்களால் கோயிலின் மேல் மற்றும் முன் பகுதியில் உள்ள சுவாமி சிலைகள், பக்தர்களின் நேர்த்திகடன் சிலைகள் நொறுங்கி விட்டது. பக்தர்கள் கோயிலுக்கு வர அச்சப்படுகின்றனர்.
அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
கற்கள் விழுவதால் மூன்று வேளை கோயிலுக்கு வந்து பூஜை செய்ய அச்சமாக உள்ளது. சுவாமி சிலைகள், பக்தர்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்றார்.