தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் அனுமதியற்ற விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை

மதுரையில் அனுமதியற்ற விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை

மதுரையில் அனுமதியற்ற விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: அனுமதியற்ற பலநுாறு விளம்பர போர்டுகளை அகற்ற கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்ததை அடுத்து, முதற்கட்டமாக 21 போர்டுகளை மாநகராட்சி அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஏராளமான விளம்பர பேனர்கள், போர்டிங், ஹோர்டிங்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அனுமதியற்றவை. இவற்றால் விபத்து அபாயம் உள்ளதால் அனுமதியற்ற போர்டுகள், பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சமூகஆர்வலர் காளிதாஸ் நடத்திய கணக்கெடுப்பில் மாநகராட்சியில் அனுமதியின்றி 500 க்கும் மேற்பட்ட போர்டுகள், ஹோர்டிங்குகள் உள்ளது என்றார். இவற்றை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனர், மாவட்ட கலெக்டருக்கு பலமுறை மனு கொடுத்தார். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மனு கொடுத்து இருந்தார்.

இதன்பின் நடவடிக்கை மேற்கொண்ட அரசு, அனுமதியற்ற விளம்பர போர்டுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக மாநகராட்சி மண்டலம் 5 ல் திருப்பரங்குன்றம் பகுதியில் 21 அனுமதியற்ற விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக பதில் அனுப்பியுள்ளனர்.

காளிதாஸ் கூறுகையில், ''ஒரு போர்டு நிறுவுவதற்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.95 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வகையில் பல நுாறு போர்டுகள் அனுமதியின்றி உள்ளதால் ரூ. பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இப்போது 21 போர்டுகளை அகற்றியதாகவும், விரைவில் மற்ற போர்டுகளையும் அகற்ற உள்ளதாகவும் தெரிவித்தனர்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us