UPDATED : நவ 25, 2026 12:44 AM
ADDED : நவ 25, 2026 12:44 AM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் தினசரி காய்கறி கடைகள் சிதிலமடைந்ததால் 2022 ல் இடிக்கப்பட்டது. புதிய கடைகள் கட்டும் வரை வியாபாரம் செய்ய நகராட்சி சார்பில் சந்தைப் பேட்டையில் ரூ.36 லட்சத்தில் 76 கடைகள் கட்டப்பட்டன. 2024 ல் ரூ. 7.87 கோடியில் புதிய தினசரி காய்கறி மார்க்கெட் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்பின் 27 மாதங்களாகியும் நகராட்சி நிர்வாகத்தினர் தற்காலிகமாக கட்டப்பட்ட கடைகளை மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயன்பாடில்லாமல் வீணாகி விட்டது.
சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி வருகிறது.
நகராட்சி நிர்வாகம் வீணாகும் கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
