ADDED : மார் 14, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தெப்பக்குளம் பாலாஜி நர்சிங் ஹோமில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்தியன் யோகா அசோசியேஷன் தமிழ்நாடு பிரிவு சார்பில் 'அடுப்பு இல்லாத இயற்கை சமையல் பயிற்சி' நாளை(மார்ச் 15) காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.
இயற்கை உணவு தயாரிக்கும் முறைகள், அதன் ஊட்டச்சத்து மதிப்பு, உடல்நல நன்மைகள், இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படும். இருபாலரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம். பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.
