/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு
/
தெருக்களில் மழைநீர் மண்டல தலைவர் ஆய்வு
ADDED : நவ 15, 2024 06:06 AM
திருநகர்: திருநகரில் ரோடுகள் சீரமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. சமீபத்தில் பெய்து வரும் மழையால் பெரும்பாலான ரோடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வுகாண கவுன்சிலர் சுவேதா, மண்டல தலைவர் சுவிதாவிடம் கோரிக்கை வைத்தார்.
மண்டல தலைவர், செயற் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் திருநகர் ஜோசப் நகர், மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டனர். அச்ச முத்தம்மன் கோயில் பின்புறம், கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி ஆண்டு முழுவதும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. அப்பகுதியையும் பார்வையிட்டனர். இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம் என மண்டல தலைவர் தெரிவித்தார்.