/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மன அழுத்தம் போக்க பயிற்சி அவசியம்: போலீஸ் துணை கமிஷனர் யோசனை
/
மன அழுத்தம் போக்க பயிற்சி அவசியம்: போலீஸ் துணை கமிஷனர் யோசனை
மன அழுத்தம் போக்க பயிற்சி அவசியம்: போலீஸ் துணை கமிஷனர் யோசனை
மன அழுத்தம் போக்க பயிற்சி அவசியம்: போலீஸ் துணை கமிஷனர் யோசனை
UPDATED : ஜன 27, 2025 12:57 PM
ADDED : ஜன 27, 2025 04:28 AM

மதுரை : மதுரை மேனேஜ்மென்ட் சங்கம் (எம்.எம்.ஏ.,) சார்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., அதிகாரிகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவு கருத்து பட்டறை நடந்தது.
எம்.எம்.ஏ., தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா பேசியதாவது:
போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அனைவரும் மனஅழுத்தம் இன்றி பணிசெய்வது அவசியம். வேலைச் சுமையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சி இன்றும் தேவைப்படுகிறது. அதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் பயிற்சி தொடங்க வேண்டும். பயிற்சிக்கு பின் புதிய உத்வேகத்துடன் செயல்படுவதன் மூலம் சுற்றுப்புறத்திலும், வேலைபார்க்கும் இடத்திலும் வீட்டிலும் சோர்வின்றி இருக்கலாம் என்றார்.
போலீசாருக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. டாப்கிட்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ருக்மணி தேவி ஏ டூ இசட் வரையான குறிப்புகளுடன் பயிற்சி வழங்கினார். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் சவால்கள், எதிர்கொள்ளும் திறன் குறித்து எடுத்துரைத்தார். பேச்சாளர் பாரதி அலுவலகம், வீட்டில் உண்டாகும் மன அழுத்தம் பற்றி விளக்கினார். போலீஸ் அதிகாரிகளுக்கு மன அழுத்தம் போக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.

