ADDED : அக் 13, 2026 06:47 PM
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் இயற்கை மருத்துவம், யோகா, மருத்துவ மேலாண்மை மற்றும் மன அழுத்தத்தின் தொடர்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. தலைமை நுாலகர் சரிதா முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை யோகா மற்றும் நேச்சுரோபதி டாக்டர் நாகராணி நாச்சியார் பேசுகையில் ‘‘இயற்கை மருத்துவம் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். மண் சிகிச்சை மூலம் உடலில் ரத்தஓட்டத்தை அதிகப்படுத்தலாம். உணவு சிகிச்சை ‘டயட்’ முக்கியம். யோகா, மூச்சுப்பயிற்சி மூலம் கோபம், மனஉளைச்சல், மனப்பதட்டம் போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தலாம்’’ என்றார்.
உயர் ரத்த அழுத்தம், மருத்துவ மேலாண்மை, பரவல் தன்மை, இளம் வயதினரிடையே உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தத்திற்கும் உயர் ரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து டாக்டர்கள் ராமானுஜ சித்தார்த், ரங்கநாத், முகமது சினான், ராமசாமி ஜனகன் பேசினர்.
