ADDED : ஆக 18, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: சீமானுாத்து கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கின் சுமை துாக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதிய உயர்வு நிர்ணயிக்கவில்லை, அடையாள அட்டை, பணி மூப்புக்கான அட்டைகளை வழங்குவதை முறைப்படுத்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டப் பொருளாளர் ஜெயக்கொடி, ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், செல்வம், ராஜா, தவம், ரமேஷ்குமார், அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
