ADDED : ஆக 26, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தானில் ஒப்பந்த அடிப்படை துாய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், தரமான உணவு, பணியாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வி.சி.க., துாய்மை பணியாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைச் செயலாளர்கள் மோகன், காமராஜ் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். ஐந்து மணி நேரம் நடந்த போராட்டத்தால் பணிகள் பாதித்தன. பேரூராட்சி அதிகாரிகளின் சமரசத்துக்குப் பின் பணிக்குச் சென்றனர்.
