நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவர்களின் திட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் சிறந்த திட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் 2.0 திட்டத்தில் சிறந்த 50 யோசனைகளை 'ஸ்டார்ட் அப்'பாக மாற்றியதற்காக விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட 10 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. காமராஜர் பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி விருது வழங்கினார். கல்லுாரிச் செயலாளர் மகேஷ் குமார், முதல்வர் செந்தில் உட்பட பலரும் பாராட்டினர்.

