தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சத்குரு சேவாஸ்ரமத்தில் மாணவர் சேர்க்கை

 சத்குரு சேவாஸ்ரமத்தில் மாணவர் சேர்க்கை

 சத்குரு சேவாஸ்ரமத்தில் மாணவர் சேர்க்கை


ADDED : ஏப் 21, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 10:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கோவை ஆர்.எஸ்.புரம் சத்குரு சேவாஸ்ரமம் அறக்கட்டளை, தாய் அல்லது தந்தை இல்லாதவர்கள் அல்லது இருவரையும் இழந்த, ஏழ்மை நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பள்ளிச் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பதினொன்று முதல் 13 வயதுக்குட்பட்ட, அதாவது 6வது வகுப்பு முதல் 8வது வகுப்பு வரை கல்வி பயிலும் ஆண் சிறுவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். இலவச உணவு, உடை, கல்வி, தொழிற்கல்வி, பராமரிப்பு செலவையும் ஆசிரமம் ஏற்கும் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவர்களின் தாய், தந்தை அல்லது பாதுகாவலர்கள், மாணவனின் குடும்ப பின்னணியை விரிவாக எழுதி அனுப்பலாம். கிராமப்புற, மலைவாழ் பகுதிகளில் குடியிருப்போருக்கு முன்னுரிமை உண்டு. விண்ணப்பங்களை மே 20 க்குள், நிர்வாக அறங்காவலர், சத்குரு சேவாஸ்ரமம், 30, வெங்கடசாமி சாலை (கிழக்கு), ஆர்.எஸ்.புரம், கோவை - 641 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகவல்களுக்கு 04222 2552034 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us