ADDED : மார் 07, 2026 02:21 AM

அ நிறம் | அளவு
பேரையூர்: மதுரை மாவட்டம், பேரையூரில் எஸ்.ஐ.,யை கம்பியால் குத்திய கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.
பேரையூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஹரி, 22. இவர், கல்லுாரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதி ஆண்டு படித்து வருகிறார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு பேரையூர் முக்குச்சாலை யில் அவரது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவ்வழியே சென்ற பேரையூர் எஸ்.ஐ., அழகர் இதை தடுத்துள்ளார். எஸ்.ஐ.,யுடன் வாக்குவாதம் செய்த ஹரி, அருகில் நின்ற காரின் முன்பக்க வேல் படம் இருந்த கம்பியை பிடுங் கி தலையில் குத்தினார்.
இதில், காயமடைந்த அழகர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். ஹரியை கைது செய்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
