ADDED : டிச 22, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இளநிலை இறுதியாண்டு மாணவியர் கிராம தங்கல் திட்ட பயிற்சி பெறுகின்றனர்.
கரட்டுப்பட்டியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு மரங்கள் நடுவதால் கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வேங்கை, வில்வம், புங்கன், சவுக்கு, வேப்ப மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் அவசியம், புவி வெப்ப மயமாதல் குறைதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் அதிகரிப்பு, மரங்கள் மூலம் இயற்கையோடு ஒன்றி வாழ வாய்ப்பு என நன்மைகளை விளக்கினர். மாணவிகள் காவியதர்ஷினி, மகிஷா ரேஷ்மா, மல்லிகா, பார்க்கவி, சவுமியா, ஸ்ரீமதி, வீரமணி இதில் பங்கேற்றனர்.

