தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவருக்கு கல்வி உதவி

 மாணவருக்கு கல்வி உதவி

 மாணவருக்கு கல்வி உதவி


ADDED : மார் 08, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் தந்தையை இழந்த மாணவர், கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்தார்.

இதனால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட முடிவு செய்து உணவு டெலிவரி வேலைக்கு சென்றார். இதை அறிந்த ரோட்டரி கிளப் ஆப் மதுரை தமிழ்ச் சங்கம் தலைவர் பாலகுரு, செயலாளர் பிரேம் ஆகியோர் சங்க உறுப்பினர்கள் உதவியுடன் மாணவரின் கல்லுாரி கட்டணம் முழுவதையும் செலுத்தி படிப்பை தொடர உதவி செய்தனர். தற்போது அம்மாணவர் படித்துக்கொண்டே மாலை நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியையும் செய்து வருகிறார். ஏழ்மை நிலையில் படிப்பை தொடர உதவி செய்த ரோட்டரி சங்கத்தினருக்கு சக மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us