ADDED : ஆக 28, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் சமயநல்லுார் பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி, அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்தார். தந்தை 4 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் கட்டட தொழிலாளி. ஒரு சகோதரர் உள்ளார். அலைபேசி வாயிலாக ஒருவருடன் பழகியதை தாய் மற்றும் ஆசிரியர்கள் ஏற்கனவே கண்டித்தனர்.
சமீபத்தில் பாடங்களில் மதிப்பெண் குறைந்ததை தொடர்ந்து ஆசிரியர் கண்டித்தார். 'எனது பழைய தவறை கூறி பேசுவதால் மன அழுத்தத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை' என மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, மாணவியின் தாய், உறவினர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., ஆனந்தராஜ், போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்தனர்.
