ADDED : மார் 25, 2026 07:06 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் உச்சபட்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பெயிண்டர் சிவநாதன் மாரியம்மாள் தம்பதியின் மகன் கிஷோர் 15. ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
குடும்ப பிரச்னை காரணமாக மாரியம்மாள் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி முகாமில் தங்கி இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு மாரியம்மாளை பார்க்க சென்ற கிஷோர் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
இன்று கணித தேர்வு உள்ளதால் கிஷோரை படிக்க சொல்லி தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
