/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி தங்கம் வென்ற மாணவி
/
ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி தங்கம் வென்ற மாணவி
ADDED : ஆக 03, 2025 04:33 AM

மேலுார் : மேலுார் புதுசுக்காம்பட்டி ரகு, சசிகலா தம்பதி மகள் யோகிதா. தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி.
தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்த 20வது தெற்காசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று ஊர் திரும்பினார்.
அவரை எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், கிராமத்தினர் வரவேற்றனர்.
மாணவி கூறியதாவது: ஜூலை 22 முதல் 30 வரை நடந்த போட்டியில் 18 நாடுகள் கலந்து கொண்டன.
இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணிகளுடன் மோதி வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றோம்.
இப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றது இதுவே முதல் முறை. நாட்டிற்காக விளையாடி தங்கம் வென்றது பெருமையாக உள்ளது.
வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் அலெக்ஸ், ஊக்கமளித்த பெற்றோர்களுக்கு நன்றி என்றார்.

