/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
/
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
ADDED : டிச 31, 2025 06:21 AM
திருமங்கலம்: போதிதர்மா தற்காப்பு கலைப்பள்ளி, சிலம்பம் இளைஞர் சங்கம் சார்பில் மேலுாரில் சிலம்பம் போட்டி நடந்தது. மாமல்லன் மணி, மூத்த சிலம்பாட்ட கலைஞர் கணேசன், கராத்தே ஆசிரியர்கள் நெளிவு, பாண்டி மீனாள், போஜராஜன் போட்டிகளை துவக்கி வைத்தனர். லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ், திருப்பதி ஸ்போர்ட்ஸ் அகாடமி, செக்கானுாரணி பிரான்சிஸ் பள்ளியைச் சேர்ந்த 65 மாணவர்கள் பல்வேறு பரிசுகளை பெற்றனர். ஏற்பாடுகளை லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் பால்பாண்டி, தற்காப்பு பள்ளி நிறுவனர் செந்தில் செய்திருந்தனர்.
மேலுார்: மேலுாரில் இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் சிலம்பம், வாள் வீச்சு போட்டி நடந்தது.
பாரதிதாசன் அகாடமி மாணவர்கள் 12 பதக்கங்களை வென்று மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்றனர். அவர்களை பயிற்சியாளர்கள் முஜிபுர் ரகுமான், கார்த்திகேயன், அகாடமி தாளாளர் ஜீவா, செயலாளர் சூர்யா பாராட்டினர். ரிதன், நெய்வேலன், லலித், பர்ஷித், கார்த்திகேயன் ஆகியோர் தங்கம் வென்றனர். சமீம், அகமது வெள்ளி வென்றனர். துர்கா, பூவிகா, பெரியசவ்லி, ராஜாராம், ருத்ராதேவி, மதுஸ்ரீ ஆகியோர் வெண்கலம் பதக்கம் வென்றனர்.

