ADDED : அக் 18, 2025 04:10 AM

பாலமேடு: திருச்சியில் பூஞ்சோலை மல்டி ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட் கூடைப்பந்து சங்கம், திருச்சி மாவட்ட ரோலர் ஸ்கேட் கூடைப்பந்து சங்கம் சார்பில் மாநில போட்டிகள் 2 நாட்கள் நடந்தது.
இதில் பாலமேடு ஜெராஜ் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்றனர். 11 வயது பிரிவில் ஹரிக்ரித்திஸ், கிரிஷ்குமார், கவின் சித்தார்த், ரகுநந்தன், ஸ்ரீஹரி, தமிழ் அரசன், ஸ்ரீ சுதன், ஹரிஸ், வல்லவன், மதேஷ், சாஜீத், யோகேஸ்வரன் தங்க பதக்கம், 17 வயது பிரிவில் சிவ சூர்யா, தியாஷ், மிதுன், யோகேஸ், கயிலைராஜன், அகிலேஷ் வெண்கல பதக்கம் வென்றனர்.
இதன்மூலம் பாலமேடு பத்ரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி, பி.என்.யூ.ஏ.சங்கர நாராயணா நாடார் பள்ளி, கே.வி.டி., மெட்ரிக் பள்ளிகளுக்கு பெருமை சேர்த்தனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவர்கள், அகாடமி பயிற்சியாளர் பிரபாகரனை மாநில செயலாளர் பூஞ்சோலை, துணை செயலாளர் மகேஸ்வரி, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.