ADDED : மார் 05, 2024 05:38 AM

அ நிறம் | அளவு
மேலுார் : தேனி மாவட்டத்தில் நடந்த கராத்தே போட்டியில் மதுரை இமாகுலேட் பள்ளி மாணவர்கள் சந்துரு, அஸ்வந்த்ராஜ், பிரிதிவி ஆகியோர் கட்டா பிரிவில் முதலிடம் பெற்றனர்.
அக்சிலியம் பள்ளி மாணவர்கள் பிரியன், ரிசிவன்ந் கட்டா மற்றும் சண்டையில் முதலிடத்தை பெற்றனர். டீம் கட்டா பிரிவில் மாணவர்கள் ஜோஸ்வா, அருண்பாண்டி, சர்வேஷ் முதலிடம் பிடித்தனர். ஒப்பன் குமிட்டே பிரிவில் அல்ட்ரா கல்லுாரி மாணவர்கள் வீரணன், முகமது அஸ்வந்த் முதலிடம், தாமோதரன், செந்தில்குமார் 2ம் இடத்தை வென்றனர்.
மாணவர்களை தலைமையாசிரியைகள் இருதய அரசி, சுமிதா, கென்சோ கராத்தே தலைமை பயிற்சியாளர் ஜெகதீசன், இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
