ADDED : பிப் 06, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் வாடிப்பட்டி தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது.
இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மதுரை தனபால் மேல்நிலை பள்ளி மாணவர்கள் அணி, விருதுநகர் ஜி.எஸ்., இந்து மேல்நிலை பள்ளி அணியை வீழ்த்தி முதலிடம் வென்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் தனபால் ஜெயராஜ், தலைமையாசிரியர் தினேஷ் சேவியர், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் பாபு, பயிற்சியாளர் குமரேசன் உள்ளிட்டோர் பாராட்டினர்.