/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்
/
ஆட்டோவில் தொங்கிச்செல்லும் மாணவர்கள்
ADDED : ஜூலை 09, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தானில் இருந்து மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, திருமங்கலம், வாடிப்பட்டி பகுதிகளுக்கு டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் பஸ்களின் இயக்கம் குறைந்துள்ளது.
இங்குள்ள விவேகானந்தா கல்லுாரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் வருகின்றனர். பலர் விடுதியிலும் தங்கிப் படிக்கின்றனர். மாணவர்கள் சென்றுவர பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் ஷேர் ஆட்டோக்களில் மாணவர்களை புளிமூடைகளாக அடைத்துக் கொண்டு செல்கின்றனர். பலர் தொங்கியபடியும் ஆபத்தாக பயணிக்கின்றனர்.
பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பெற்றோர் பலர் வலியுறுத்தினர்.