ADDED : ஏப் 13, 2026 02:45 AM

அ நிறம் | அளவு
அலங்காநல்லுார்: வாவிடமருதுார் ஊராட்சியில் பழமையான பள்ளிக் கட்டடத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1 முதல் 5ம் வகுப்பு வரை மந்தையில் உள்ள இரு வகுப்பறை ஓட்டு கட்டடத்தில் செயல்படுகிறது.
6 முதல் 8 வரை அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் உள்ள கட்டடங்களில் இயங்குகிறது. 1969ல் கட்டிய பழமையான ஓட்டு கட்டடத்தில் 5 வரை வகுப்புகள் நடக்கின்றன. இதனுடன் சேர்ந்திருந்த சமையலறை சில ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. அருகே புதிய சமையல் அறை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இடிந்த சமையலறை கட்டடம் அருகே சிறுவர்கள் விளையாடுகின்றனர். வலுவிழந்த கட்டடச் சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பு கருதி சேதமடைந்த கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
