தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்பது அவசியம்:

புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்பது அவசியம்:

புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்பது அவசியம்:


ADDED : பிப் 08, 2024 08:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்பது அவசியம் என மதுரையில் நடந்த தினமலர் பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா விருது போட்டி பரிசளிப்பு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் அறிவுறுத்தினார்.

அவர் பேசியதாவது: மாணவர்கள் நலன் கருதி தினமலர் நாளிதழ் பல ஆண்டுகளாக தொடர்ந்து சேவையாற்றி வருவது பாராட்டுக்குரியது. தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கே புதிய வாய்ப்புகளும் சவால்களும் காத்திருக்கின்றன. ஒரு புராஜெக்ட் தயாரிக்க வேண்டும் என்றால் நுாலகங்களை தேடி ஓடிய காலம் இருந்தது.

ஆனால் தற்போது 'சாட் ஜிபிடி' என்ற 'சாப்ட்வேர்' அதற்கு தேவையான மொத்த டேட்டாவையும் கொடுத்து விடுகிறது. கூகுளிலும் இதுபோன்ற டூல்ஸ்கள் அதிகம் கிடைக்கின்றன. இதற்கு ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.,) தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடிப்படை மெஷின் லேர்னிங், டேட்டா கலெக் ஷன் தான். ஒரு பைனாகுலரில் பூவை பார்த்தால் அதன் குடும்ப வகை, ஆயுள்காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை சொல்லும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொழில்நுட்பம் விஷயத்தில் மாணவர்கள் எப்போதும் 'அப்டேட்' ஆக இருக்க வேண்டும் என்றார்.

மாணவருக்கு பயன்படும் தினமலர்


மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளி முதல்வர் அனிதா பேசியதாவது: மாணவர்கள் பலர் நாளைய தலைவர்களாகும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் அறிவியல் உள்ளிட்ட எந்த துறையை தேர்வு செய்தாலும் அந்த துறையில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

இதுபோன்ற தேடுதலுக்கு தினமலர் பட்டம் நாளிதழ் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் படிப்பதை விட்டுவிடக் கூடாது. பள்ளி முடித்து செல்லும் மாணவர்கள் ஒரு புதிய உலகத்திற்குள் செல்ல வேண்டும். அதற்கு ஏற்பட தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

பாக்ஸ்...

----நம்பிக்கையோடு வந்தோம்; வெற்றி வாகை சூடினோம்* வினாடி வினா விருது போட்டியில் வாகை சூடிய மாணவர்கள் மகிழ்ச்சி............வினாடி வினா விருது பெற்ற மாணவர்கள் கூறியதாவது:* சொல்லியடித்தோம்மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பட்டம் இதழ் படித்து வருகிறோம். முதல் முறையாக இறுதி போட்டிக்கு தேர்வாகினோம். நம்பிக்கையுடன் போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடியுள்ளோம். இப்போட்டிக்காக இருவரும் தலா 50 இதழ்களை முழுமையாக படித்தோம். பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்தது. தமிழாசிரியர் செயங்கொண்டான் சிறப்பாக வழிகாட்டினார். எதிர்பார்த்தது போல் வெற்றி கிட்டியது. இரட்டிப்பு மகிழ்ச்சி.- முதல் பரிசு வென்ற காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் தருண், பாலமுத்துகுமார்.* திக்குமுக்காட வைத்ததுகடந்தாண்டு இப்போட்டியில் மூன்றாம் பரிசு வென்றோம். இந்தாண்டு முதல் பரிசு எதிர்பார்த்து வந்தோம்.அதற்காக பிளஸ் 2 என்றாலும் வினாடி வினாவிற்கு நேரம் ஒதுக்கி படித்தோம். நினைத்தபடியே இறுதி போட்டியிலும் நுழைந்து இந்தாண்டு இரண்டாவது இடத்தை பெற்றோம். எங்கள் அம்மாக்கள் அழகுலட்சுமி, கலாவதி போட்டிக்கு தயாராவதற்கு எங்களுக்கு உதவியாக இருந்தனர். மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் அளித்த பரிசுகளால் திக்குமுக்காடி போயுள்ளோம். மாணவர்கள் நலனில் தினமலர் காட்டும் அக்கறை பிரமிக்க வைக்கிறது.- இரண்டாம் பரிசு வென்ற திண்டுக்கல் என்.எஸ்.வி.வி., மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவிகள் க.ராஜபுவனேஷ்வரி, பா. அமிர்தா.* கை கொடுத்த நம்பிக்கைஇரண்டு ஆண்டுகளாக தினமலர் பட்டம் இதழ் படிக்கிறோம். பல பகுதிகள் சுவராஸ்யமாக உள்ளன. வேதியியல், விளையாட்டு பகுதிகளை விரும்பி படிப்போம். இப்போட்டிக்காக இருவரும் தலா 50 இதழ்களை ஒதுக்கி படித்தோம். பல கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் விடையளித்தோம். மதிப்பெண் கிடைத்தது. முதல் பரிசு எதிர்பார்த்தோம். ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு, நம்பிக்கை இருந்ததால் வெற்றி பெற முடிந்தது.- மூன்றாம் பரிசு வென்ற விருதுநகர் நோபிள் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் ஜெ.நவீன், ஜெ.பிரபாகரன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us