தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளிக்கு ரோடு கேட்டு போராடிய மாணவர்கள்

பள்ளிக்கு ரோடு கேட்டு போராடிய மாணவர்கள்

பள்ளிக்கு ரோடு கேட்டு போராடிய மாணவர்கள்


ADDED : ஜூலை 09, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல 200 மீ., அளவில் தனிநபர்களின் பட்டா இடம் உள்ளதால் ரோடு வசதி இல்லை. தனியார் நிலங்களின் வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர்.

ரோட்டிற்காக அளவிடும் பணி நடந்த போது பட்டா இடங்களால் பாதை குறுகியதால் ரோடு அமைக்கும் பணி தாமதமானது. ரோட்டுக்கு இடம் கொடுக்க பட்டாதாரர்கள் மறுத்தனர். ரோடு வசதிகேட்டு நேற்று காலை கிராம மக்கள், மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், ஊரகவளர்ச்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டாதாரர்களிடம் பேசினர். ரோடு அமைக்க இடம் தருவதாக சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us