ADDED : ஜன 07, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் தொடர் மழையால் 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின. பல கண்மாய்களில் மறுகால் பாய்ந்து விளைநிலங்களில் நீர் புகுந்துள்ளது.
டி. கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியுள்ளது. இப்பள்ளியை சுற்றி உள்ள ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால் கண்மாய் நிறைந்து வரும் தண்ணீர் பள்ளிக்குள் செல்கிறது. இதனால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கண்மாயையும் ஓடையையும் துார்வார பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்த டி. கல்லுப்பட்டி யூனியன் நிர்வாகம் இனியாவது துார்வாருமா.