ADDED : செப் 19, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் செப்.,28 ல் முதல்வர் விஜய் துவக்கி வைக்கிறார்.
அந்நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடக்க வாய்ப்புள்ளதால் நேற்று மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநர் உமா ஆய்வு செய்தார். தங்க மோதிர பாதுகாப்பு பெட்டகம், வார்டு பகுதிகள் மற்றும் அங்கு உள்ள சுகாதார வளாகங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். வருவாய், பொதுப்பணி, மருத்துவத்துறை அலுவலர்களுடனும், எம்.எல்.ஏ., விஜய் உடனும் ஆலோசனை நடத்தினார்.
