தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ படப்பிடிப்பில் விபத்து ஸ்டண்ட் மாஸ்டர் பலி

படப்பிடிப்பில் விபத்து ஸ்டண்ட் மாஸ்டர் பலி

படப்பிடிப்பில் விபத்து ஸ்டண்ட் மாஸ்டர் பலி


ADDED : ஜூலை 14, 2025 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம்: நாகை அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், சண்டை பயிற்சியாளர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திரைப்பட இயக்குனர் ரஞ்சித்தின், 'வேட்டுவம்' படப்பிடிப்பு, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது.

அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், 52, என்பவர் காரில் தாவி செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. எதிர்பாராவிதமாக மோகன்ராஜ் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கீழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us