/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம்
/
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம்
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம்
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம்
ADDED : நவ 14, 2025 04:41 AM
பேரையூர்: பேரையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் அதிகளவில் ஆதிக்கம் செய்வதால் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு சான்றிதழ் பெறவும் கணிசமான தொகை செலுத்த வேண்டியது உள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
இந்த அலுவலகத்திற்கு நூற்றுக்கணக்கானோர் தங்களுக்கு தேவையான வில்லங்கச் சான்றிதழ், திருமண பதிவு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளைப் பெற வருகின்றனர்.மேலும் கிரையம், தானம், பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார பத்திரம், அடமானம் போன்றவற்றை பதிவு செய்வதற்கும் வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் சென்றால்தான் வேலைகள் விரைவாக முடிகிறது.
விளை நிலங்களை பிளாட்களாக, அதாவது ஏக்கர் கணக்கில் இருப்பதை சென்ட் கணக்கில் பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை லஞ்சம் கைமாறுகிறது.
பத்திரங்களுக்கு ஏற்ப குறைந்தது ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை லஞ்சமாக பெறுகின்றனர். ஏற்கனவே சொத்து வழிகாட்டி மதிப்பு அதிகரித்து, பத்திர செலவு அதிகமாகிறது எனப் புலம்பும் பொது மக்களுக்கு, அதிக கையூட்டு கொடுப்பது மேலும் சுமையாக இருப்பதாக புலம்புகின்றனர். புரோக்கர்களை கட்டுப்படுத்தி லஞ்சத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

