/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருச்சி சாரதாஸ் கைத்தறியின் முதல் பட்டுபுடவை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம் ஷோரூம் வளாகத்தில் தறிக்கூடம் அமைத்து அசத்தல்

ADDED : பிப் 19, 2025 04:05 AM

மதுரை : நெசவுத் தொழில், நெசவாளர்களை கவுரவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனம் கைத்தறியில் நெய்த முதல் பட்டுப்புடவையை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பணம் செய்தது.
நிர்வாக இயக்குனர்கள் ரோஷன், சரத் கூறியதாவது: நெசவுக்கலைஞர்களை ஊக்குவிக்கவும், இக்கலை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவும், இளைய தலைமுறையினருக்கு நம் பாரம்பரிய கலாசாரத்தை பதிய வைக்கவும் திருச்சி சாரதாஸ் வளாகத்தில் கைத்தறி கூடம் அமைக்கப்பட்டு பட்டுச்சேலையை உற்பத்தி செய்யும் அழகை வாடிக்கையாளர்கள் நேரடியாக கண்டு ரசிக்கும்படி அமைத்துள்ளோம்.
தறியில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பட்டுச்சேலையும் இறைப்பணிக்கு அர்ப்பணிக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதல் சேலை சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அடுத்தடுத்த சேலைகள் சர்வசமய கோயில்களுக்கும் சமர்ப்பிக்கப்படும். திருச்சி சாரதாஸில் சுபமுகூர்த்த பட்டு, ஜவுளி, ரெடிமேட் ரகங்களை 12 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம் என்றனர்.
நெசவாளர் ராஜன் கூறுகையில், ''சாரதாஸ் நிறுவனத்தின் நெசவு கூடத்தில் ஒரு சேலை நெய்வதற்கு 22 ஆயிரம் முறை கைகளாலும், காலாலும் இயக்க வேண்டும். பெடலின் கனம் 9 கிலோ எடையும், முந்தி டிசைனுக்கு 13 கிலோ எடையையும் காலால் மிதிக்க வேண்டும். இதற்கு 60 மணிநேரம் ஆகும்.
ஒரு சேலை உற்பத்தி செய்ய, தறி நெய்யும் நிலைக்கு கொண்டு வர 18 மணி நேரமாகும். தறியின் துணை பணிகளுக்கு 6 பேர் தேவைப்படுவர். எங்களை போன்ற நெசவாளர்களுக்கு மட்டும் தெரிந்த இக்கலையை வாடிக்கையாளர்கள் கண்டு வாங்கும் நோக்கில் வைத்துள்ள திருச்சி சாரதாஸ் முயற்சியை வரவேற்கிறோம்'' என்றார்.