/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானியத்தில் தார்ப்பாய் மண்புழு உர படுக்கைகள்
/
மானியத்தில் தார்ப்பாய் மண்புழு உர படுக்கைகள்
ADDED : அக் 09, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மைய பகுதி விவசாயிகளுக்கு, முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் மண்புழு உர படுக்கைகள் வழங்கப்படுகின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சிறு தானிய திட்டத்தில் தார்ப்பாய்களும் விநியோகிக்கப்படுகிறது. இரண்டுக்கும் 50 சதவீத மானியம் உண்டு. தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகலுடன் திருநகர் 2வது பஸ் ஸ்டாப் அருகே ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து பெறலாம் என உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.